கோவையில் செல்போனுக்கு தவணை பணம் கட்டாத தூய்மைப் பணியாளருக்கு கத்திக்குத்து - உறவினர் கைது!

கோவை: கோவையில் செல்போனுக்கு தவணை பணம் கட்டாத தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் செல்போனுக்கு தவணை பணம் கட்டாத தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.

கோவை அருகே செல்போன் வாங்கிய தூய்மைப் பணியாளர் தவணைத் தொகை கட்டாததால் தனது உறவினர் ஆத்திரமடைந்து கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினரை கைது செய்தனர்.

துடியலூர் அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் ஜான் (25). தூய்மைப் பணியாளரான இவர், அந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் தவணை முறையில் பணம் செலுத்துவதாக கூறி ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கினார்.

அப்போது, செல்போன் கடையில் தனது உறவினர் ராஜ்குமார் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜான் இரண்டு மாதமாக தவணைத் தொகையை செலுத்தவில்லை. இதனால் செல்போன் கடைக்காரர் ராஜ்குமாரை தொடர்புகொண்டு தவணைத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்குமார், ஜான் மனைவியிடம் முறையிட்டுள்ளார். இதனை அறிந்த ஜான், ராஜ் குமார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...