வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சருக்கு மனு..!

கோவை: வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஊதிய உயர்வு குறித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மூன்று வருடத்துக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம். கடந்த மாதமே தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஒப்பந்தம் முடிவு பெற்றுவிட்டது. தேயிலைத் தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்கள் இணைந்து புதிய ஒப்பந்தத்தை வரைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் முடிவுற்ற பின்னும் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராமல் இழுத்தடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வால்பாறையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோழிக்கடை கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூபாய் 500 ரூபாயும் அகவிலைப்படி ரூபாய் 200-ம் சேர்த்து ரூபாய் 700 குறைந்தபட்ச கூலியாகக் கிடைக்கவும் நான் ஸ்டாஃப் மற்றும் சூப்பர்வைசர்களுக்கும் தனிப்பட்ட குறைந்த பட்ச கூலியை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோழிக்கடை கணேசன் தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...