கொங்குநாட்டை நிர்வாக வசதி வேண்டி தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் - கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி!

கோவை: கொங்குநாட்டை நிர்வாக வசதி வேண்டி தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.


கோவை: கொங்குநாட்டை நிர்வாக வசதி வேண்டி தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மாநிலம் 12 மாவட்டமாக இருந்தது, தற்போது 38 மாவட்டமாக பிரிந்துள்ளது. 34 அமைச்சர்கள் தற்போது இருக்கின்றனர் என தெரிவித்தார்.



வரிவருவாய் அதிகம் கொடுத்தாலும் கொங்குநாடு பகுதியில் விகிதாச்சார அடிப்படையில் எதுவும் நடக்கவில்லை என கூறிய அவர், தமிழகத்தில் வரி வருவாய் 66 சதவீதம் கொங்குநாட்டின் 11 மாவட்டங்களில் இருந்துதான் அரசுக்கு செல்கின்றது என தெரிவித்தார். அரசு வருவாயை மட்டும் பெற்றுக்கொண்டு இந்த பகுதிகளுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார். நிர்வாக வசதிக்காக கொங்கு பகுதியை தனி மாநிலமாக பிரித்தால் இப்பகுதி மேலும் வளர்ச்சி பெறும்.

மேலும், 1976ல் இருத்து இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம். கொங்குநாடு என்ற பகுதி முன்னுக்கு வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். கொங்குநாடு என்பது கவுண்டர் சமுதாயத்திற்கு மட்டுமானதல்ல, என்று கூறிய அவர் இது கொங்கு பகுதியில் வாழும் அனைவருக்குமானது என தெரிவித்தார். இது பிரிவினையாகாது எனவும் தெரிவித்தார். நாங்கள் தனிநாடு கேட்கவில்லை என்றும் தனி மாநிலம்தான் கேட்கின்றோம் எனவும் தெரிவித்தார்.



இதனையடுத்து, வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தவறு என தெரிவித்த அவர், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், வன்னியர்களுக்கு வடக்கு தமிழகம் கொடுக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கும் அதிமுகவிற்கும் சம்மந்தமில்லை என தெரிவித்தார்.

மேலும், கொங்குநாடு விவகாரத்திற்கு அதிமுக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எதிர்ப்பு கூறியிருப்பது முனுசாமியின் கருத்தாக இருக்கலாம் என தெரிவித்தார். அனைத்து சமூகத்தினரையும் ஒன்று சேர்த்து கொங்குநாடு கோரிக்கையினை வலுப்படுத்துவோம் என தெரிவித்த அவர், கொங்கு நாடு கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை மனு தாக்கல் செய்ய இருக்கின்றோம் எனவும் பிரதமரை விரைவில் சந்திக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...