கோவை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, கோவை உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதேநேரம், தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
குறிப்பாக, நாளை நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழை பெய்யும். கோவை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்யும். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல, நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக சின்ன கல்லாரில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. அவலாஞ்சி, 9; சோலையாறு, 8; வால்பாறை, 7; பந்தலுார், 6; நீலகிரி, 3; கும்மிடிப்பூண்டி, பெரியாறு, பேச்சிப்பாறை, 2; தென்காசி, அம்பை, திருச்சுழி, பாபநாசம், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும்.தென்மேற்கு, மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகளில் வரும், 15ம் தேதி வரை மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.