கோவை சூலூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!

கோவை: கோவை, சூலூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு வருடமாக ரவி பிரசாத் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் வேலை செய்பவர். தனது வீட்டில் ரவி பிரசாத் நண்பர்களுடன் சில நாட்களாக தங்கி வந்து உள்ளார்.

இதனையடுத்து, கடந்த 05.07.2021 அன்று ரவி பிரசாத் தனது நண்பர்களுடன், அவரது அறையில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது கேட்ட சத்தத்தில், வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், ரவி பிரசாத்தின் அறைக்கு வந்து பார்க்கையில் ரவி பிரசாத்தை அவருடன் இருந்த நண்பர்கள் கொலை செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், இது குறித்து வெங்கடேசன் அருகில் உள்ள சூலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து கிருஷ்ணகுமார், முனியாண்டி மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதாக போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...