கோவையில் சிறுமி குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் போக்சோவில் கைது!

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சிறுமி குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சிறுமி குளித்துக் கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை சுகுணாபுரம் இட்டேரி வீதியைச் சேர்ந்தவர் பரத் கிருஷ்ணா (20) செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள 13 வயது சிறுமி குளிப்பதை அடிக்கடி எட்டிப்பார்த்து உள்ளார். இதனை சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பரத் கிருஷ்ணாவை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் வாலிபர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் தாய் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் விசாரணை நடத்தி, பரத் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

இதனிடையே, சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த பரத் கிருஷ்ணாவை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதனைத்தொடர்ந்து, வாலிபரை தாக்கியதாக சிறுமியின் தந்தை உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...