கோவை: கோவையில் ஆசைவார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் கிரண்குமார் (21) ஆம்புலன்ஸ் டிரைவர். இவருடைய நண்பர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.
அப்போது, நண்பரை சந்திக்க சென்ற கிரண்குமாருக்கு அங்கு வேலை செய்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கிரண்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை தன்னுடைய மகளை அழைத்து வர மில்லுக்கு சென்றார். பின்னர் மகளை அழைத்துக்கொண்டு கோவை ரயில் நிலையம் வந்தார். அங்கு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாக கூறி சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், கிரண்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கடந்த 9ம் தேதி ஒரு கோவிலில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெள்ளை கோயிலுக்குச் சென்று சிறுமியையும் ஆம்புலன்ஸ் டிரைவரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக கிரண் குமார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவிநாசி சிறையில் அடைக்கப்பட்டார்.