கோவை: கேரளாவில் ஜிகா வைரஸ் எதிரொலியாக பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவக் குழுவினர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சில தினங்களாக அதிகரித்து வருகிறது. அதேவேளையில், ஜிகா வைரஸ் பரவி வருவதால், 15-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கேரளாவில் இருந்து ஏராளமானவர்கள் தினந்தோறும் கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து ஜிகா வைரஸ் பரவல் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்து கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட 7 வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்களில் போலீஸார் ஏற்கெனவே கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இ-பதிவு இருந்தால் மட்டுமே கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். கூடுதலாக ஊராட்சி மன்ற ஊழியர்களும் தணிக்கை செய்து வருகின்றனர்.
ஜிகா வைரஸ் பரவல் கேரளாவில் அதிகரித்து வருவதால் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவக்குழுவினரை அமைத்து முறையாக கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.