சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டதால் ஆழியார் வால்பாறை ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இந்தநிலையில், ஆழியார் வால்பாறை ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இந்தநிலையில், ஆழியார் வால்பாறை ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை, பூங்கா, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. இந்தநிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அறிவித்து வந்த நிலையில், கடந்த எட்டாம் தேதி முதல் சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஆழியார் அணை, பூங்கா மற்றும் வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



இந்தநிலையில், இன்று விடுமுறை நாளை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் ஆழியார் அணை, பூங்கா மற்றும் வால்பாறைக்கு படையெடுத்துச் சென்றார். இதில், வால்பாறை செல்லும் வழியில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவு, காட்சிமுனை பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் பலர், தங்களது செல்போன்களில் ஆழியார் அணை மற்றும் வனப்பகுதிகளை புகைப்படம் எடுத்தும், நண்பர்களுடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்தநிலையில், ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நோய்க் கட்டுப்பாட்டு விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...