கோவை: வால்பாறையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியம் ரூபாய் 600-க்கு குறையாமல் இருக்க வேண்டும். மேலும், தமிழக அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலைத் தோட்டங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் வருடத்துக்கு நானகாண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம். கடந்த மாதமே தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் ஒப்பந்தம் முடிவு பெற்றுவிட்டது. தேயிலைத் தோட்ட நிர்வாகங்களும் தொழிலாளர்கள் சார்பில், தொழிற்சங்கங்கள் இணைந்து புதிய ஒப்பந்தத்தை வரைபடுத்துவது வழக்கம். ஒப்பந்தம் முடிவுற்ற பின்னும் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்வராமல் இழுத்தடித்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், வால்பாறையில் உள்ள திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களை அழைத்து புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், ஒருநாள் ஊதியம் ரூபாய் 600-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் கோழிக்கடை கணேசன், மதிமுக கல்யாணி, எஸ்.எம்.எஸ்.மாணிக்கம், பிரபாகரன் உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.