கோவையில் வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஹோட்டல் தொழிலாளியின் மனைவி கொலையா? போலீஸார் விசாரணை..!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வீட்டினுள்ளே பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வீட்டினுள்ளே பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரிய குளத்தை சேர்ந்தவர் பாண்டி (37). இவரது மனைவி மல்லிகா(34) இவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வ.உ.சி வீதியில் வாடகை வீட்டில் குடி வந்தனர். பாண்டி அருகில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா கணவர் பாண்டி உடன் சேர்ந்து ஹோட்டலில் வேலை செய்து வந்தார். பாண்டி வேலை செய்யும் ஹோட்டல் முதலாளிக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பாண்டி வேலை இல்லாமல் இருந்து உள்ளார்.

இந்தநிலையில், இன்று காலை பாண்டி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மனைவி குழாயில் தண்ணீர் வருகிறது என்பதை சொல்வதற்காக பாண்டியன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது, உள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அவர் வீட்டின் கதவை திறந்து பாரத்துபோது கதவு பூட்டாமல் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மல்லிகா அரை நிர்வான நிலையில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூர் காவல் உதவி கண்காணிப்பாளர் திருமால் , தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் தடயவியல் நிபுணர்களை வரவைத்து சோதனை நடத்தினர். விசாரணையில் கணவர் பாண்டி நான்கு நாட்களுக்கு மேலாக வீட்டிற்கு வரவில்லை என தெரியவந்துள்ளது. மனைவியை கணவர் பாண்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றாரா? மேலும் பாண்டி வெளியில் சென்ற‌ நேரத்தில் வேறு யாராவது வந்து மல்லிகாவை கற்பழித்து கொலை செய்து சென்றனரா? என்ற கோணத்தில் தொண்டாமுத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பெண் நிர்வாணமாகப் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...