கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!

கோவை: அதிமுக கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறந்து வைத்து இரண்டு இலவச ஆம்புலன்ஸ் வசதிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம் குறைகளைத் தட்டிக் கேட்போம் என பேட்டியில் தெரிவித்தார்.



கோவை: அதிமுக கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரிவு அலுவலகம் திறந்து வைத்து இரண்டு இலவச ஆம்புலன்ஸ் வசதிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம் குறைகளைத் தட்டிக் கேட்போம் என பேட்டியில் தெரிவித்தார்.

கோவை அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு, ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழா ஆகியவற்றை எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.



பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கோவை மாவட்ட மக்கள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 10 எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். நாங்கள் அம்மாவுடைய ஆசியுடன் எம்ஜிஆர் அவர்களின் ஆசியோடு மக்களுக்கு செய்ய நினைத்ததை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்.



அதற்காக இன்று கோவை அதிமுக வழக்கறிஞர்கள் கட்சி அலுவலகத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.



அதைத் தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக நூலகம் திறந்து, கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்காக எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து பாடுபடுவோம். ஆளுங்கட்சியில் ஏற்படும் குறைகளைச் சுட்டிக் கேட்டு மக்களுக்காக தொடர்ந்து போராடி அதற்கு தீர்வு காணப்படும். கொங்கு மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பொதுமக்கள் வாக்களித்து பத்து அதிமுக எம்எல்ஏக்களை தந்துள்ளனர். ஆதலால், தொடர்ந்து வாக்களித்த மக்களுக்காக உங்களுடைய எம்எல்ஏக்கள் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இரட்டை சகோதரர்களாக செயல்படக்கூடிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மக்களுடைய தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுத்து, மக்கள் மனங்களில் என்றும் நிறைந்து இருப்பார்கள்'' என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், செய்தியாளர்கள் கொங்கு நாடு தனி யூனியன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பிஆர்ஜி அருண் குமார், கே.ஆர்.ஜெயராமன் உட்பட 10 எம்எல்ஏக்கள் உடன் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் பிரிவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...