திருப்பூர்: கொங்கு நாடு என்ற விவாதப் பேச்சை உருவாக்கியுள்ள பாஜகவிற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில், ஒன்றிய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் தனது சுய விவரக் குறிப்பில் பிறந்த ஊர் கொங்கு நாடு என்று குறிப்பிட்டிருந்தார். இது விவாதப்பொருளாக உருவாக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தினசரி பத்திரிகையில், ஒன்றிய அரசு கொங்கு நாடு உருவாக்கும் பரிசீலனையில் இருப்பதாக தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தினசரி நாளிதழை தடை செய்வதோடு, ஒன்றிய அரசுக்கு எதிராகவும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தினசரி நாளிதழின் நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.