திருப்பூர்: கொரோனா தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும், பெட்ரோல் - டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் வேகம் குறைந்து மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மத்திய அரசு தமிழகத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், விலை உயர்ந்து வரக்கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்புகளை பார்வைக்கு வைத்தும் கொரோனா பெருந்தொற்று இன்னும் நம்மிடையே இருப்பதை உணர்த்தும் வகையில் கொரோனா வேடமிட்ட ஒருவரையும், மருத்துவர் செவிலியர் பணியாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பி.பி.இ கிட் உடை அணிந்தவர்களை நிறுத்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.