கோவை: வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவு பெற்றுவிட்டது. நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த இதுவரை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுபறியில் உள்ளது. இந்தநிலையில், வால்பாறைக்கு வருகை தந்த செய்தித் துறை அமைச்சா் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூபாய் 600 வழங்க வேண்டும் என்றும் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தொழிற்சங்கம் L.P.F தலைவா் கோழிக்கடை ந.கணேசன் தலைமையில் வால்பாறை திராவிட தோட்டத் தொழிலாளா் முன்னேற்ற சங்க M.L.F. தலைவா் சு.கல்யாணி, பிரபாகரன், மகுடீஸ்வரன், வடைகடை குட்டி, பிரகாஷ் ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.