கோவை: வால்பாறை பகுதியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டங்களை மேம்படுத்தவும் பாசனத் திட்டத்தில் விடுபட்டுள்ள நல்லாறு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வால்பாறை பகுதியில் உள்ள நீர் தேக்க அணைகளை ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்யும் மழை நீரைக் கொண்டு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, பிஏபி நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, வால்பாறையில் உள்ள ஆனைமலை ஆறு, நீராறு அணை, சோலையாறு அணை, பரம்பிக்குளம் அணை என ஆறு அணைகளின் நீர் கேரளா மாநிலத்துக்கு சென்று அரபிக் கடலில் வீணாகக் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்று பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் மேல் நீராறு, சோலையாறு அணையும் ஆழியாறு திட்டத்தில் 4 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்ய வேண்டும் என்றும் 1958ஆம் ஆண்டு கேரளா அரசும் தமிழக அரசும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நீர் பங்கீட்டு முறையில் செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டமும் செயல்படுகிறது.
இடமலையாரு பகுதியில் கேரளா அரசு அங்கு அணை கட்டியபின்பு தமிழக அரசு ஆணைமலையாறு பகுதியில் அணை கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் உள்ளது.

மேலும், இதை செயல்படுத்த புதிதாக துணை ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழகம் மற்றும் கேரள அரசு செயல்பட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அணைகளை ஆய்வு செய்து முதல்வரிடம் தெரியப்படுத்தி சுமுகமாக இரு மாநிலங்கள் செயல்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக நீரார் அணை மற்றும் சின்னக்கல்லார் அணை, மின் உற்பத்தி நிலையம் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையம் ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், கலெக்டர் சமீரன், பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் பொறியாளர் முத்துசாமி, தாசில்தார் ராஜா, வால்பாறை வனச்சரக வனச்சரகர் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால், ஜெயச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கட்சியின் நிர்வாகிகள் பால்பாண்டி, கோழி கடை கணேசன், ஜேப்பியார், சுதாகர், செல்வம், செந்தில், தமிழ்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.