கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட விஜயாபுரம் பகுதி மக்களுக்கு குப்பை வண்டியில் வைத்து கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த மாதம் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டது.
இந்தநிலையில், நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.
இன்று நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது குப்பை கொண்டு செல்லும் வாகனம் மூலம் கொண்டு வந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் குப்பை வண்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘‘கொரோனா பெருந்தொற்றில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்த நிலையில், மீண்டும் நோய்த் தொற்று பரவும் வகையில் குப்பை கொண்டு செல்லும் வாகனத்தின் மூலம் கபசுர குடிநீர் வழங்குவது கண்டிக்கத்தக்கது'' என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.