கோவை: கோவை மாவட்டத்தில் 136 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து கொண்டே செல்கிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியில் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஊரக பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால், அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 136 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 79 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.