கோவை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த உள்ளதைப்போல பெட்ரோல் டீசல், விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி கே வாசன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலை வருமா, வராதா என்ற சந்தேகம் உள்ளது எனவும் பொதுமக்களிடையே தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதிக அளவில் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நீண்டகாலம் பயனளிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த அவர், விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களில் குறுகிய கால கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் விவசாய பணிகளுக்கு பெட்ரோல், டீசல் மீது மானியம் வழங்க வேண்டுமெனவும், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கோவை தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, அவினாசி மற்றும் திருச்சி சாலைகளில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்த ஜிகே வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்கள் புதியவர்களுக்கு வழி விட்டுச் சென்றதாக கருதுவதாகவும் ஒருசிலரின் விலகல் கட்சியை பாதிக்காது எனவும் கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் அதன் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக தலைமையிலான மாநில அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது போல பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தற்போது வரை திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசை மட்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் மாநில அரசை வலியுறுத்துவது குறித்து ஊடகங்கள் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்த அவர், ஆக்சிஜன் பயன்பாட்டுக்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதை எதிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.