கோவை: கோவையில் குடிபோதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தூங்கி கொண்டிருந்த 2 மகள்களை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம் மசக்காளிபாளையம் நீலிகோனார் வீதி, கதவு எண் 12 என்ற முகவரியில் வசித்து வந்த பத்மநாபன் என்பவர் கடந்த 6/12/2018ம் ஆண்டு குடிபோதையில் தனது மனைவி செல்வராணி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவியை தாக்கி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகள்களான ஹேமவர்ஷினி (15), ஹர்ஷா (8) ஆகிய இருவரையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
அதன்பேரில், சிங்காநல்லூர் காவல்நிலைய குற்ற எண் 1387/18 u/s 294(b)498(A) 302 506 (1)Ipc sec 4 Tnphw act ன்படி வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ஆனந்த் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அவர்கள் மேற்படி இரு மகள்களையும் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மேற்படி குழந்தைகளின் தந்தையான பத்மநாபனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் (Double life imprisonment ) மற்றும் இரண்டு ஆண்டுகள் (Two year imprisonment) சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.