பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு, அக்கட்சியின் கட்டமைப்பு மாவட்ட செயலாளர் பாபு பிரகாஷ் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி தலைமை தொலைப்பேசி நிலையம் முன்பு, அக்கட்சியின் கட்டமைப்பு மாவட்ட செயலாளர் பாபு பிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் பொதுமக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

எனவே, மத்திய மாநில அரசுகள் மனமிறங்கி பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...