கோவையில் ஒரே நாளில் 71 பவுன் நகை கொள்ளை..! தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

கோவை: கோவையில் ஒரே நாளில் 71 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஒரே நாளில் 71 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் துணிகரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று மாதத்தில் ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த திருடர்கள் தங்கள் கைவரிசையை தொடங்கி உள்ளன. அதனால் கோவையில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அடுத்தடுத்த தொடர் திருட்டில் ஒரே நாளில் 71 பவுன் நகை மாயமாகி உள்ளது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சிங்காநல்லூர் அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ். காலனி கங்கா நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சுசீந்திரன்(33). இவர் தனது உறவினர் ஒருவர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, சுசீந்திரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கோவை செல்வபுரம் லாலாலாலா கார்டன் நேரு காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜேசுதாஸ் என்பவரின் மகன் அனித்ஜான் (36). இவர் கடந்த மாதம் ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று விட்டார். பின்னர் கடந்த மாதத்தில் ஒருநாள் கோவைக்கு திரும்பி வந்த அவர் வீட்டை சுத்தம் செய்து விட்டு வீட்டின் சாவியை வேலைக்கார பெண்ணிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவைக்கு குடும்பத்துடன் திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் எட்டாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அனித்ஜான் செல்வபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...