கோவை: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 84 ஆண்டு பழைமையான இந்நிறுவனம் தனியார் கைகளில் இருந்த பொழுது பல முறைகேடுகள் நடைபெற்றதையெட்டி 1971ல் தேசியமயமாக்கப்பட்டது.
இந்நிறுவனம் 20-21 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 17,000 கோடி பிரிமியம் ஈட்டியுள்ளது. நாடு முழுவதும் பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை 1991 அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் காப்பீட்டு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
குறிப்பாக, இந்தியாவின் முன்னோடி காப்பீட்டு திட்டமான தமிழக மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை 12 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் நாடு, முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் நலன் சார்ந்த காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பிரதம மந்திரி சுரக்ஷ் பீமா யோஜனா தனிநபர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தை மிக குறைந்த பிரிமியமாக ரூ.12 மட்டும் பெற்று ரூபாய் இரண்டு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கி வருகிறது.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வருடா வருடம் அரசிற்கு தேவையான நிதி ஆதாரத்தையும் திரட்டித் தருகிறது.
பல லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது தேசத்தின் இறையான்மையை கேள்விக் குறியாக்கும். சாமானிய மக்களின் காப்பீட்டு சேவைகள் மக்களுக்கு எட்டாக்கணி ஆகிவிடும்.
ஆகவே இத்தனியார் மயமாக்கல் முயற்சியை கண்டித்து நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராடி வருகின்றனர். மேலும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து ஒன்றிய அரசின் இம்முயற்சியை கைவிடக் கோரி வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் குரலாக எழுப்ப வேண்டும் என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கோரிக்கை மனுவை அளித்துக் கொண்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.