கேரளாவில் இருந்து இ-பாஸ் இல்லாமல் கோவை வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு - உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்!

கோவை: கேரளாவில் இருந்து இ-பாஸ் இல்லாமல் கோவை வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: கேரளாவில் இருந்து இ-பாஸ் இல்லாமல் கோவை வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடைபெறும் என்றும், கொரோனா இல்லை என்று பரிசோதனை அறிக்கை இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

அதேபோல, இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் இருந்தும், கொரோனா இல்லை என்ற பரிசோதனை அறிக்கையை காண்பிக்காவிட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதேசமயம், கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குச் செல்லலாம். ஆனால், வரும்போது கொரோனா பரிசோதனை அறிக்கை, இ-பாஸ் அவசியமாகும். எல்லைப்பகுதியில் தொழில் செய்பவர்கள் தினமும் வந்து செல்லும் பிரச்சினையில் ஏற்கனவே உள்ள நடைமுறை கடைபிடிக்கப்படும். கேரளாவில் இருந்து வரும் ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகளை கண்காணிக்க போத்தனூர், கோவை ரயில் நிலையம் ஆகியவற்றில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கள் காய்கறிகள் கொண்டு வந்த லாரிகள் திருப்பி அனுப்பப்பட்ட காரணத்தினால் கோவையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...