கோவை: கோவை காந்திபுரத்தில் சாலையில் கிடந்த ரூ. 51 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை வேலாண்டிபாளையம் மருதனார் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று இரவு தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஆர்.ஆர் வீதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள சாலையில் கைப்பை ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த விஜயகுமார் ஆட்டோவை நிறுத்தி விட்டு அந்த பையை எடுத்தார். அதில் பணம், வங்கி புத்தகம் மற்றும் செல்போன் இருந்தது.
பின்னர், அதனை எடுத்துக்கொண்டு விஜயகுமார் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அந்த செல்போனில் இருந்து போன் வந்தது. அதை எடுத்து விஜயகுமார் பேசினார். அந்த பெண் தனது பெயர் ஸ்ரீ தேவி என்றும் கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள ஆர்.ஆர் வீதியில் இருந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து கைதவறி விழுந்து விட்டதாக தெரிவித்தார். உடனடியாக அவர் காட்டூர் போலீஸ் நிலையம் வாருங்கள் என கூறினார்.

இதையடுத்து, போலீஸ் நிலையத்துக்கு வந்த அவரிடம் போலீசார் அவரது கைப்பையில் இருந்த ரூபாய் 51 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் இந்த செயலை போலீசார் மனதார பாராட்டினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அனைத்து ஆட்டோ டிரைவர்களும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மக்கள் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.