திருப்பூர்: பல்லடம் அருகே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலத்திற்கு செல்லும் பாதையை அதே பகுதியில் வசித்து வரும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சுப்பிரமனியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் தனது நிலத்தில் அத்துமீறி நுழைந்து தனது மனைவியை தாக்கியதாகவும், இது தொடர்பாக தான் புகார் கொடுத்தும் அதனை ஏற்காமல் ஜாதி குறித்து தவறாகப் பேசியதாக தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்து உள்நோக்கத்துடன் புகார் கொடுத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்பிரமணியம் 100க்கும் மேற்பட்டோருடன் வந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.