10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் - ஜவாஹிருல்லாஹ்

கோவை: ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறியுள்ளதால் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.



கோவை: ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறியுள்ளதால் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கோட்டைமேடு பகுதியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், இது குறித்து தமிழக முதல்வர் கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார் என்றும் அதற்கு சரியாக பதிலளிக்காமல் அணையை கட்டும் செயலில் கர்நாடக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். அங்கு அணைக்கட்டப்படால் தமிழக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்றும் இது குறித்து விவாதிக்க ஜூலை 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

யூஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டான்ஸ் சாமி உயிரிழந்திருப்பது சாதாரண உயிரிழப்பாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சிறையில் அடைத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தான் குறிப்பிடப்பட வேண்டி உள்ளது என கூறினார்.



கோவையில் தமுமுக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சேவைகளை செய்து வருகிறது. போத்தனூர் கஸ்தூரி நகரில் தமுமுக ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வந்தது. இதனை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்துள்ளனர்.

இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விசுவாசிகளாக உள்ள மதுக்கரை தாசில்தாரும் போத்தனூர் காவல் ஆய்வாளரும் போட்டு கொடுத்ததன் காரணமாக இடிக்கப்பட்டுள்ளது. அது ஆக்கிரமிப்பு பகுதியாக இருந்தாலும் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். கலைஞர் முதல்வராக இருந்த போது அரசு நிலத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் யாரேனும் இருந்தால் அதற்கான கட்டணங்களை வசூலித்துவிட்டு அந்த இடத்தை தர வேண்டும் என்று அரசாணை இருந்தது. இதனை மீறியும் முன்னாள் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இடித்துள்ளனர்.



எனவே, அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் தர இருக்கின்றோம் என தெரிவித்தார். டி.கே மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த சில கடை வியாபாரிகளுக்கு வேறு இடம் தருவதாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. எனினும் 88 வியாபாரிகளுக்கு கடைகள் தரப்படவில்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, செல்வபுரம் பகுதியில் உள்ள ஹவுஸிங் யூனிட்டிலும் 120 பேருக்கு வீடுகள் கொடுக்கப்படவில்லை. இதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆயுள் தண்டனை பெற்றிருக்க கூடியவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருவதாக கூறிய அவர், ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறி உள்ளனர். எனவே, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...