கோவை: சாதாரண பேருந்துகள் நிறம் மாற்றி சொகுசு பேருந்துகளாக இயக்கப்படுவதாக முதலமைச்சரிடம் நுகர்வோர் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்தில் சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்ட பேருந்துகளை சொகுசு பேருந்துகளாக நிறம் மாற்றி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக நுகர்வோர் அமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கோவையில் 300க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் உள்ளன. இவை, கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் இருந்து, சூலூர், வடவள்ளி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சோமனூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவையில் சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்ட நகரப் பேருந்துகள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, அவற்றை சொகுசு பேருந்துகளாக இயக்கி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கோயமுத்தூர் கன்ஸ்யூமர் காஸ் நுகர்வோர் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன், தமிழகன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவையில் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைந்த கட்டணம் மட்டுமே அரசு பேருந்துகளில் பெறப்பட வேண்டும் என்ற நிலையில், கோவை நகர பேருந்துகள் பல, சாதாரண பேருந்துகளாக உரிமம் பெறப்பட்டு, சிவப்பு நிற சொகுசு பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அப்பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை மண்டல போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, 360 நகர பேருந்துகளில் 240 சாதாரண பேருந்துகளும், 120 டீலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் சொகுசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.
மேலும், சாதாரண கட்டணம் பெறுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்க, கோவையில் சாதாரண பேருந்துகளுக்கு சிவப்பு வண்ணம் பூசி சொகுசு பேருந்துகளாக இயக்கி, இரட்டிப்பு கட்டணம் வசூலிப்பதுடன், மகளிர்களுக்கு அதில் கட்டணமில்லா பயணம் மறுக்கப்படுகிறது.
மேலும், கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சொகுசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படாததும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. கோவையில் உள்ள 4 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் கடந்த புதன்கிழமை நகரில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சொகுசுபேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்ட 17 சாதாரண பேருந்துகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பேருந்துகளை இயக்குவதில் நிகழும் இந்த முறைகேட்டை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.