தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை!

கோவை: கோவையில் மாநகரில் சேதமடைந்த மரங்களை கண்டறிந்து அகற்றவும், சேதமடைந்த மரக்கிளைகளை வெட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவையில் மாநகரில் சேதமடைந்த மரங்களை கண்டறிந்து அகற்றவும், சேதமடைந்த மரக்கிளைகளை வெட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மாநகரில் உள்ள சேதமடைந்த மரங்கள் சாயும் அபாயமும், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழும் அபாயமும் உள்ளது.

இதனிடையே, அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் மழைநீரால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகரில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்றப்பட்டன. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி வருகிறது. அதே போல் சேதமடைந்த மரக்கிளைகள் வெட்டப்படும்.’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...