கோவை: கோவையில் தள்ளுவண்டி நடைபாதை வியாபாரி சாப்பிட்ட சமோசாவில் விஷ வண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் தள்ளுவண்டி நடைபாதை வியாபாரி சாப்பிட்ட சமோசாவில் விஷ வண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பகுதியில் மொத்தமாக சமோசா தயார் செய்து அனைத்து டீ கடைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், காந்திபுரம் பகுதியில் நடைபாதைகள் மற்றும் தள்ளுவண்டி காய்கறி வியாபாரிகள் ஆங்காங்கே நின்று வியாபாரம் செய்வது வழக்கம். இவர்கள் கடையை விட்டுவிட்டு, டீ கடை சென்று சாப்பிட வாய்ப்பிருக்காது. ஆதலால் கேன் மூலமாக வரக்கூடிய டீ சாப்பிட்டுவிட்டு அவர்கள் விற்பனை செய்யும் சமோசாக்களை வாங்கி உண்பது வழக்கம்.
இந்த நிலையில், இன்று காந்திபுரம் 1ம் நம்பர் பகுதியில் தள்ளுவண்டி காய்கறி வியாபாரி ஒருவர் தன்னிடம் வாடிக்கையாக வந்து டீ, சமோசா விற்பனை செய்யும் சண்முகம் என்பவரிடம் சமோசாவை வாங்கி ஒரு கடி கடித்தார்.
அப்போது, சமோசாக்குள் கருப்பு நிற விஷ வண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்முகத்தை கூப்பிட்டார். அவர் மின்னல் வேகத்தில் மாயமாய் மறைந்தார். இதை உடனே தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவையில் கடைகளில் மாவட்ட உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வு செய்கின்றன. ஆனால், இது போல ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சமோசாக்களை மொத்தமாக தயாரித்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடிய இதுபோன்ற ஆசாமிகள், தரமற்ற உணவுகளை விற்பனை செய்கின்றனர்.
ஆதலால், மக்களுடைய உயிர் பறி போனால் என்ன செய்வது..... உடனடியாக உணவுத்துறை தலையிட்டு மொத்த சமோசா மற்றும் வடை தயாரித்து சில்லறை விற்பனை கடைகளில் வழங்கக்கூடிய மொத்த வியாபாரிகளிடம் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.