ஊரடங்கு தளர்வு: பொள்ளாச்சி ஆழியார் அணை பூங்கா திறப்பு - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஆழியார் அணை பூங்கா திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள ஆழியார் அணை, குரங்கு அருவி உள்ளிட்ட பகுதிகள் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆழியார் அணை பூங்கா மற்றும் குரங்கு அருவிக்கு வந்து செல்வது வழக்கம்.

இதனிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஆழியார் அணை பூங்கா மற்றும் குரங்கு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் சுற்றுலா தளங்களான ஆழியார் மற்றும் வால்பாறை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பொதுப்பணித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் ஆழியார் பூங்கா பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ஆழியார் பூங்கா திறக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்ட போதிலும் நோய் பரவல் அச்சம் காரணமாக தற்போது பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

அதேசமயம், மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைக்காத காரணத்தால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...