கோவை: ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட ஒப்பந்தப்படி சட்டரீதியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில், தன்னார்வலர்கள் வழங்கிய 35 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

இதில் விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு பொருட்களை வழங்கினர். மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று, கொரோனா காலத்தில் மக்கள் பாதுகாப்புப் பணியை, முதல் பணியாக முதல்வர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிர்வாக ரீதியான செயல்பட தொடங்கியுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.
ஆகவே, இதுகுறித்து, நேரடியாக அணைகளை ஆய்வு செய்து, முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடித்தவுடன் ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் உள்ளது. சட்ட ரீதியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.