கோவையில் பல்வேறு நபர்களிடம் ரூ. 49.50 லட்சம் பெற்று மோசடி செய்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கைது!

கோவை: கோவையில் பல்வேறு நபர்களிடம் ரூ. 49.50 லட்சம் பெற்று, மோசடி செய்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் பல்வேறு நபர்களிடம் ரூ. 49.50 லட்சம் பெற்று, மோசடி செய்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் மாலதி (52). பொன்னேகவுண்டன்புதுார் அரசு துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் பல்வேறு நபர்களிடம், 2017ம் ஆண்டு மே முதல், 2019ம் ஆண்டு, டிச., வரையிலான காலத்தில், 49.50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

ஆனால், கடனை திருப்பி செலுத்தவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, காசோலைகளை வழங்கினார். ஆனால், வங்கியில் பணம் இல்லை என காசோலைகள் திரும்பி விட்டன. இதுகுறித்து கேட்டபோது மாலதி முறையாக பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து, மாலதியிடம், 20 லட்சம் ரூபாய் கொடுத்த, தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் அன்னூர், குரும்பபாளையத்தை சேர்ந்த, கார்த்திக்குமார் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் மாலதி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...