கோவையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட வீடியோ குறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு!

கோவை: கோவையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட வீடியோ குறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட வீடியோ குறித்து விசாரித்து குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் வாலிபர்கள் ஒன்றாகச் சேர்ந்து மாறி மாறி போதை ஊசிகளை செலுத்திக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

கோவை மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை, போதை மாத்திரை, எனப் பல்வேறு விதமான சர்ச்சை எழுந்து கஞ்சா கும்பல், போதை மாத்திரைகள் என போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், போதை ஊசி செலுத்திக் கொள்ளும் வீடியோவால் கோவை மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றன. இது இளைஞர்களுடைய எதிர்காலத்தை சீரழிக்கும் செயலாக இருக்கிறது.

இதனால் கோவை காவல்துறை சார்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் மற்றும் விசாரணை வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இளைஞர்கள் சிலர் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி செலுத்தும் 'வீடியோ' வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவையில் கஞ்சா ஒருபுறம் இருக்க, மறுபுறம் வலி நிவாரண மாத்திரைகளை தூளாக்கி, குளுக்கோசில் கலந்து ஊசியாக உடலில் ஏற்றி போதை அனுபவிக்கும் செயல்கள் அதிகளவு நடத்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குனியமுத்தூர், சாய்பாபாகாலனி பகுதியில் போதை ஊசி, மாத்திரைகளை பயன்படுத்திய, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மருந்து விற்பனை கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உக்கடம், புல்லுகாடு பகுதியில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து, ஒருவருக்கு ஒருவர் போதை ஊசி போட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், போதை ஊசி போட்டு கொள்ளும் வீடியோ குறித்து விசாரித்து, அதிலுள்ள நபர்களை கைது செய்ய நான்கு தனிப்படைகளை அமைத்து காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் கூறுகையில், 'உக்கடம் பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரையை தண்ணீரில் கலந்து, ஒருவர் மாற்றி ஒருவர் கைகளில் ஊசி ஏற்றும் வீடியோ குறித்து விசாரிக்கப்படுகிறது. போதை ஊசி மற்றும் மாத்திரைகளை சப்ளை செய்த நபர்களும் கைது செய்யப்படுவர்' என்றனர்.

இளம்வயதில் இதுபோன்று போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், பாலியல் வன்முறை மற்றும் பல்வேறு விதமான குற்ற சம்பவங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளதாக உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...