கோவை நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கோவை: மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.


கோவை: மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இதுகுறித்த செய்திக் குறிப்பில் உள்‌ தமிழ்நாடு முதல்‌ மன்னார்‌ வளைகுடா வரை (1 கிலோமீட்டர்‌ உயரத்தில்‌) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனத்தின்‌ காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்‌, கடலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

தென்‌ மேற்கு பருவமழை தீவிரமடைவதன்‌ காரணமாக 10 மற்றும்‌ 12 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய திண்டுக்கல்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ ஈரோடு, விருதுநகர்‌, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

மேலும் குறிப்பபாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின்‌ மலை பகுதிகளில்‌ பலத்த காற்றுடன்‌ கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும்‌, மலைப்பகுதிகளில்‌ மண்சரிவு ஏற்படக்கூடும்‌ என்பதனாலும்‌ பொதுமக்கள்‌ மலை ஏற்றத்தை தவிர்க்க எச்சரிக்கை விடபட்டுள்ளது‌. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 12ம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...