தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிப்பு... ஜே.பி நட்டா சற்று முன்னர் வெளியிட்டார்

கோவை: தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியானது. இதைத்தொடர்ந்து துணைத் தலைவராக பதவி வகித்த அண்ணாமலையை, சற்று முன்பு ஜேபி நட்டா தமிழக பாஜக தலைவராக அறிவித்துள்ளார்.


கோவை: தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியானது. இதைத்தொடர்ந்து துணைத் தலைவராக பதவி வகித்த அண்ணாமலையை, சற்று முன்பு ஜேபி நட்டா தமிழக பாஜக தலைவராக அறிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றதை அடுத்து, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணை தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை 10 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...