கோவை: கோவையில் ஒரே நாளில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து தங்கக்காசு நகை, பணம், கொள்ளை அடிக்கப்பட்டது.

கோவை காரமடை பெல்லாதி பகுதியை சேர்ந்தவர் செல்வதுரை வயது 46. இவர் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோத்தகிரிக்கு சென்றார். இந்தநிலையில், நேற்று செல்வதுரைக்கு உறவினர் ஒருவர் அவருக்கு போன் செய்து வீட்டின் கதவு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டவுடனே வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ஒரு பவுன் தங்க காசு மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து செல்வதுரை காரமடை போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோன்று கோவில்பாளையம் அடுத்த கோட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் 45, விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்றார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வீடு திறந்து இருப்பதாக அவருக்குத் தகவல் தெரிவித்தார். இதைக் கேட்ட அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து அதில் இருந்த 3 பவுன் தங்காசுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. பாலமுருகன் கோவில்பாளையம் போலீஸில் புகார் தெரிவித்தார்.
கோவில்பாளையம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் கனிராஜ் 45, தனியார் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அதிலிருந்த 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.