கோவையில் ஸ்டேன்ஸ் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..!

கோவை: ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையின் காரணமாக மரணமடைந்த அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையின் காரணமாக மரணமடைந்த அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிவானந்த காலனி டாடாபாத் பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய அரசின் பாசிச படுகொலையை கண்டித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் கண்டன உரையாற்றினார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ‘‘2019ஆம் ஆண்டு உபா சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்தபோது நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம். மாநில அரசுகளின் அனுமதியை கேட்காமலேயே யாரை வேண்டுமானாலும் என்ஐஏ உள்ளிட்ட மத்திய படைகள் கைது செய்யலாம் என்பதே அந்தத் திருத்தம். அப்படி கைது செய்யப்படுபவருக்கு பிணையே கிடைக்காது என்பது கொடூரத்தின் உச்சம். இதன்காரணமாகவே இதே காரணத்திற்காக உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அருட்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி மரணமடைந்துள்ளார்.

ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக அரசு ஈடுபடுகிறது. பீமா கோரேகான் வழக்கில் மூன்றாண்டுகள் தற்போதுவரை 16 அறிவுஜீவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசின் இந்த பாசிச நடவடிக்கையைக் கண்டித்தும், ஸ்டேன்ஸ் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டும் அனைத்து பகுதி மக்கள், அமைப்புகள் கட்சிகளைத் திரட்டி வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அத்தகைய பணிகளை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்'' என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...