கோவை சூலூர் அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு... பழிக்குப்பழியாக வெறிச்செயல்..!

கோவை: கோவை சூலூர் பகுதியில் வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. கஞ்சா வியாபாரி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.


கோவை: கோவை சூலூர் பகுதியில் வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு. கஞ்சா வியாபாரி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த வெறிச்செயல் நடந்துள்ளது.

சூலூர் பள்ளபாளையம் பகுதியில் கடந்த மே மாதம் கஞ்சா வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலில் சிங்காநல்லூரைச் சேர்ந்த வசந்த் பள்ளபாளையத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 2 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் பாரதி புரத்தைச் சேர்ந்த சரவணன் உட்பட 8 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், கொலை செய்யப்பட்ட வசந்த்தின் அண்ணன் பேச்சிமுத்து தனது தம்பி கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நேற்று அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளபாளையம் பாரதிபுரம் பகுதியில் உள்ள சரவணன் வீட்டிற்கு சென்றார்.

அங்கு சாலையோரம் சரவணன் மனைவி ஜெயந்தி(40) அமர்ந்து இருந்தார். அப்போது அவரது தலையில் பேச்சிமுத்து திடீரென அரிவாளால் வெட்டினார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி சத்தம் போட்டு ஓடி பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்டார். கொலைவெறியில் விடாமல் துரத்திய பேச்சிமுத்து மீண்டும் ஜெயந்தியை வீடு புகுந்து வெட்டினார். வலி தாங்காமல் ஜெயந்தி அலறி சத்தம் போட்டார். அவர் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பேச்சிமுத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த ஜெயந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...