கோவை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்ப பாடமாக தமிழ் மொழி இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு ம.தி.மு.க இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன் சவால் விட்டுள்ளார்.

‘‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், விருப்ப பாடமாக தமிழ் மொழி இன்றும் உள்ளது. இல்லை என்பதை, வைகோ நிரூபிக்க வேண்டும்.'' என பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர் சேகர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், ம.தி.மு.க ஈஸ்வரன் இதுகுறித்து கூறியதாவது, ‘‘இன்று 1 மணிக்கு கோவை புலியகுளத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வாருங்கள். அந்தப் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டுகிறேன்.
நீங்கள் சொன்னது போல தமிழ் ஒரு பாடமாக இல்லை எனில் சமஸ்கிருதத்திற்கு பதிலாக தமிழை ஒரு பாடமாக கொண்டு வர தாங்கள் தயாரா? கோவை புலியகுளத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை ஆங்கிலமும் இந்தியும் மொழிப்பாடமாக உள்ளது.
அதன் பின்பு 6, 7, 8-ஆம் வகுப்புகளில் சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இவைகளுக்கு மட்டுமே தேர்வு உண்டு. அதன்பின்பு, 9, 10 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் தமிழ் பாடம் குறித்து குறிப்பிடப்படுவதில்லை.
மாணவர்கள் விரும்பினால் தற்காலிக ஆசிரியரை வைத்து தமிழ் சொல்லித்தரப்படும். அதுவும் ஆசிரியர் கிடைப்பதை பொறுத்துதான். இதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? எனவும் தெரிவிக்கவும். இதுதான் நிலை.
அதனால், இன்று SR சேகர் அவர்கள் மதியம் 1 மணிக்கு புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்தால் இருவரும் விசாரித்து விட்டு நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
இது மட்டுமில்லாமல் சம்ஸ்கிருதத்திற்கு பதில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டுவர ஒன்றிய தலைமை அமைச்சர் அவர்களிடம் தமிழக பாஜக சார்பாக கோரிக்கை வைத்து நிறைவேற்றித் தர வேண்டும்'' என்றார்.