கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தை மேம்படுத்தும் வகையில் முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு..!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளத்தை மேம்படுத்தும் வகையில் முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே 152 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளத்தை மேம்படுத்தும் வகையில் முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடி கிராமத்தில் 152 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது.

சுற்றுவட்டார கிராமப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கும், விவசாய பாசனத்திற்கும் பயன் பெற்று வந்த கோதவாடி குளம் ஆக்கிரமிப்பு மற்றும் நீர்வழிப்பாதை அழிப்பு போன்ற காரணங்களால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காததால் தற்போது இந்த குளம் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.

தற்போது இந்தக் குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற கெளசிகா நதி பாதுகாப்பு அமைப்பு, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் இணைந்து குளத்திலுள்ள முட்புதர்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கோதவாடி குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இந்தநிலையில், இந்தக் குளத்தை பார்வையிட சென்னையில் 2016-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் ஏரிகள் நவீனப்படுத்தும் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய திருநாவுக்கரசு இன்று கோதவாடி குளத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இதில் கோதவாடி குளத்தின் மதகுபகுதி, குளத்தின் கரைகள் மற்றும் குளத்திற்கு நீர்வரும் வழித்தடம், பிஏபி வாய்க்கால் மூலம் மழைக் காலங்களில் உபரியாக செல்லும் தண்ணீர் கோதவாடி குளத்திற்கு வரும் வழிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.



இதில், கோதவாடி ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...