கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் இன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஹைபாரஸ்ட் தேயிலைத் தோட்ட அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தேயிலை தோட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 30ஆம் தேதியே ஒப்பந்தம் முடிவு பெற்றுவிட்டது. தேயிலைத் தோட்ட நிர்வாகம் இதுவரை தொழிற்சங்கங்களை அழைத்து புதிய ஒப்பந்தம் சம்பந்தமான எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. கடந்த வாரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவின்படி நிர்வாகம் உடனடியாக தொழிற் சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தவறும்பட்சத்தில் எட்டாம் தேதி முதல் ஒவ்வொரு தேயிலைத் தோட்ட நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் இன்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் சார்பில் ஹைபாரஸ்ட் தேயிலைத் தோட்ட அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுக் குழு தலைவர் வால்பாறை ஹமீது தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் யூ கருப்பையா காங்கிரஸ் சௌந்தரபாண்டியன், எல்.பிஎஃப் வீரமணி, விடுதலைச் சிறுத்தை மோகன், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.