கோவை: கோவை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், வேளாண் பல்கலைக்கழகம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் கஞ்சா, மாத்திரைகள், போதை ஊசிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்காக போலீஸார் தீவிர தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், கோவை நகரில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ஆர்.எஸ்.புரம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, வேளாண் பல்கலைக்கழக வாசலருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை சோதனை செய்தனர். அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேட்டையப்பன் என்பவரின் மகன் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
மேலும், அவளிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதேபோல ரத்தினபுரி போலீஸார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரத்தினபுரி கே.கே.நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களின் நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரின் மகன் தினேஷ் குமார்(24) பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னபாபு என்பவரின் மகன் கேசவன்(29) கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மூவரையும் சிறையில் அடைத்தனர்.