கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இன்று முதல் கூடுதலாக 146 பேருந்துகள் இயக்கப்படுவதாக கோவை கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முதல் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 550 பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாளில் குறைந்த அளவிலான பயணிகளே பேருந்துகளைப் பயன்படுத்திய நிலையில், அதன் பிறகு, மாநகரம் மற்றும் புறநகரங்களில் பணிக்குச் செல்வோா் அதிக அளவில் பேருந்துகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதைத் தொடா்ந்து, பயணிகள் வருகை அதிகரிப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் கோவையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுடன் கூடுதலாக 62 பேருந்துகள், மாநகரில் கூடுதலாக 83 பேருந்துகள் என கூடுதலாக 146 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் மூலமாக கோவையில் இன்று முதல் 696 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கோவை கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.