கோவை மாவட்டம் சோமனூரில் அழகு கலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திரும்பம்..!

கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் அழகு கலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திரும்பம் ஏற்பட்டுள்ளது. அவரது கள்ளகாதலனுடன் சேர்ந்து கொள்ளை போனதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கள்ள காதலனை காவல் துறையினர் கைது செய்து, 19 சவரன் நகையினை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் அழகு கலை நிபுணர் தற்கொலை வழக்கில் திடீர் திரும்பம் ஏற்பட்டுள்ளது. அவரது கள்ளகாதலனுடன் சேர்ந்து கொள்ளை போனதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கள்ள காதலனை காவல் துறையினர் கைது செய்து, 19 சவரன் நகையினை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரின் மனைவி கங்காதேவி. அழகு கலை நிபுணரான இவர் நேற்று முன் தினம் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சீனிவாசன் அங்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு நிலையத்திற்கு வந்த மூன்று நபர்கள், கங்காதேவியின் கை, கால்களை கட்டி வாயையும் துணியால் கட்டி அணிந்திருந்த 19 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று சம்பவம் குறித்து கணவன், மனைவி இருவரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கும் போதே, கங்காதேவி தனது வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் பியூட்டி பார்லரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முத்துப்பாண்டி என்பவரை கைது செய்துள்ளனர். முத்துப்பாண்டிக்கும் கங்காதேவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இருவரும் சேர்ந்து கொள்ளை நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது. 3 பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கணவரிடம் தெரிவித்த நிலையில், கணவர் வெளியில் சொல்ல மாட்டார் என கங்காதேவி நினைத்துள்ளார்.

ஆனால், கணவர் காவல் நிலையத்தில் கட்டாயம் புகார் கொடுத்து ஆக வேண்டும் எனக் கூறி மறுநாள் மனைவியை அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் விரைவில் சிக்கிக் கொள்வோம் என பயந்த அழகு கலை நிபுணர் கங்காதேவி, வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும், கங்காதேவியின் செல்போனிலிருந்து முத்துப்பாண்டியின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருப்பதும், அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஊட்டியில் இருந்த முத்துப்பாண்டியை கருமத்தம்பட்டி போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 19 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...