கோவை: தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தொடங்கி வைத்தார்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது, தமிழகத்தில் எத்தனை திருநங்கைகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2009ம் ஆண்டுக்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே திருநங்கைகளுக்கு என்ன தேவை என்பதை பூர்த்தி செய்ய முடியும். தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேலும், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.