கோவை: கோவை ஊரகப் பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க, 3 ஆயிரம் படுக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை ஊரகப் பகுதியில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க, 3 ஆயிரம் படுக்கைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் போது, சிகிச்சைக்காக கோவை மாவட்டத்தில் உள்ள 228 கிராம ஊராட்சிகளில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த படுக்கை வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் பெரிய அளவில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதன் பின் தமிழக அரசின் நடவடிக்கையால் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்தளவே காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தினமும் 400-க்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்தநிலையில், கொரோனா இரண்டாவது அலையின் போது மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 241 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. இது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
‘‘கொரோனா இரண்டாவது அலையின் போது ஊரக பகுதிகளான சூலூர் வட்டாரத்தில் 21 மையங்களில் 220 படுக்கைகளும், துடியலூர் வட்டாரத்தில் 14 மையங்களில் 458 படுக்கைகளும், மதுக்கரை வட்டாரத்தில் 17 மையங்களில் 360 படுக்கைகளும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 39 மையங்களில் 387 படுக்கைகளும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் 27 மையங்களில் 293 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டன.
காரமடை வட்டாரத்தில் 34 மையங்களில் 81 படுக்கைகளும், எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் 18 மையங்களில் 207 மையங்களும், ஆனைமலை வட்டாரத்தில் 8 மையங்களில் 175 படுக்கைகளும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் 21 மையங்களில் 310 படுக்கைகளும், அன்னூர் வட்டாரத்தில் 20 மையங்களில் 127 படுக்கைகளும், கிணத்துக்கடவு வட்டாரத்தில் 13 மையங்களில் 241 படுக்கைகளும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் 9 மையங்களில் 142 படுக்கைளும் அமைக்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க முன் ஏற்பாடாக இந்த படுக்கை வசதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.'' இவ்வாறு அவர் கூறினார்.