பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது!

கோவை: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி மீன்கரை சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, இரட்டை கண்பாலம் அருகே கார்த்திக்கை வழிமறித்த குமரன் நகரைச் சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகன் என்ற இருவரும், கார்த்திக்கை தாக்கிவிட்டு, அவரின் இருசக்கர வாகனம், வெள்ளி செயின் மற்றும் செல்போனை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதனையடுத்து, அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தைப்பேட்டையில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத் மற்றும் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...