வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்!

கோவை: வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.


கோவை: வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் எஸ்டேட் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், கனமழையின் காரணமாக வால்பாறை அருகே குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் பாரதிதாசன் நகரில் முத்துப்பாண்டி என்பவருடைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.



இதில் வீட்டின் சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், வீட்டின் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டுள்ளதால் எப்பொழுது இடிந்துவிழும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...