கோவை கிணத்துக்கடவில் 10ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவை கிணத்துக்கடவில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 16 வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் 21ம் தேதி காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவியின் உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் காணாமல் போன மாணவி கண்டுபிடித்துத் தர கிணத்துக்கடவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.

இதனிடையே, காணாமல் போன மாணவி கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர்.

அப்போது, அந்த மாணவியிடம் விசாரணை நடத்திய போது கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி(23) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி தன்னை கடத்தி வந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுப்ரமணி என்ற வாலிபரை நேற்று இரவு கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட மாணவியை கோவையில் உள்ள காப்பகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...